×

பிற மதத்தினரை அச்சுறுத்தி டிவிட்டரில் வீடியோ பதிவு செய்தவர் கைது

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு வந்த புகாரில், முஹம்மது சுஹைல் (31) என்பவர், கடந்த 29ம் தேதி அவரது டிவிட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணின் மாண்பை குலைக்கும் விதமாகவும், பிற மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும், பல்வேறு பிரிவினரிடையே பகை, கோபம் மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டுள்ளதால், எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி போலீசார் விசாரணை நடத்தி, பல்லாவரம் மீனாட்சி நகர் கலாதரன் தெருவை சேர்ந்த முஹம்மது சுஹைல் மீது வழக்கு பதிந்து அதிரடியாக நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். எனவே, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் எந்த தகவலையும் பதிவிடுவதற்கு முன், அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், சைபர் கிரைம் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம், என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 

The post பிற மதத்தினரை அச்சுறுத்தி டிவிட்டரில் வீடியோ பதிவு செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cyber Crime Unit ,Chennai Central Crime Branch ,Muhammad Suhail ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது..!!